×

கொப்பியம் கிராமத்தில் நுகர்வோரை அச்சுறுத்தும் ரேஷன் கடை கட்டிடம்: புதிதாக கட்ட வலியுறுத்தல்

 

கொள்ளிடம், பிப்.23: கொள்ளிடம் அருகே சின்னகொப்பியம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்திற்கு பதிலாக புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்ட வலியுறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பண்ணங்குடி ஊராட்சியைச் சேர்ந்த சின்னக் கொப்பியம் கிராமத்தில் புத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடை அமைந்துள்ளது. இங்கே கற்பள்ளம், பண்ணங்குடி, பெரிய கொப்பியம்,சின்ன கொப்பியம்,அழகாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 550க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்தக் கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் கட்டிடம் முழுமையும் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது. காலத்தில் மழை பெய்யும் போது தண்ணீர் உள்ளே கசிந்து வந்து கட்டிடத்திற்குள் வைக்கப்பட்டுள்ள சர்க்கரை, அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் பாதிக்கிறது. கட்டிடம் சேதமடைந்து காணப்படுவதால் பொருட்கள் வாங்க வரும் நுகர்வோர் கடும் அச்சப்படுகின்றனர்.

எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் இந்த கட்டிடம் இருந்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்களாக ரேஷன் கடை கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ரேஷன் கடை கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கொப்பியம் கிராமத்தில் நுகர்வோரை அச்சுறுத்தும் ரேஷன் கடை கட்டிடம்: புதிதாக கட்ட வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Koppiam ,Kollidam ,Chinnakoppiyam village ,Chinnak Koppiam ,Pannangudi Panchayat ,Kollidam, Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறை அருகே நடுரோட்டில் அரசு...